MARC காட்சி

Back
மாமண்டூர் குடைவரை
245 : _ _ |a மாமண்டூர் குடைவரை -
300 : _ _ |a குடைவரை
500 : _ _ |a

          மாமண்டூர் நரசமங்கலத்து குடைவரைத் தொகுதியில் குன்றுத் தொடரின் தென்புறத்தே அமைந்துள்ள இரண்டு குடைவரைகளும் நரசமங்கலம் வருவாய் எல்லைக்கும், இடையிலுள்ள ஓடைக்கப்பால் வடபுறத்தே உள்ள இரண்டு குடைவரைகளும் மாமண்டூர் வருவாய் எல்லைக்கும் உட்பட்டதாகும்.  நரசமங்கலம் எல்லையிலுள்ள முற்றுப் பெறாத சிறிய குடைவரையும், முற்றுப் பெறாத பெரிய குடைவரையும் தனித் தனியே குன்றுகளில் அமையப் பெற்றுள்ளன.

         பெரிய குடைவரை அமைந்துள்ள குன்று சிறிய குடைவரை அமைந்துள்ள குன்றினை விட அள்வில் சற்றுப் பெரியதாகும். மாமண்டூர் எல்லையிலுள்ள வடக்கு குடைவரையும், ருத்ர வாலீஸ்வரமும் குன்றின் சரிவில் அமையப் பெற்றுள்ளன.  நான்கு குடைவரைகளிலும் முகப்புக் கூரையுறுப்புகளாக உத்திரமும், வாஜனமும் அமையப் பெற்றுள்ளன. இந்நான்கு குடைவரைகளின் கருவறையின் முன்சுவர்கள் நான்முக அரைத் தூண்களைப் பெற்றுள்ளன.  முதற் குடைவரை முகப்புத் தூண் வரிசையை அடுத்து நீள் சதுர வடிவில் முகமண்டபமும், பின் சுவரில் மூன்று கருவறைகளுக்கான அமைப்பும் காட்டப் பட்டுள்ளது.  இரண்டாம் குடைவரை இந்நான்கு குடைவரைகளுள் அளவில் பெரியதாகும்.

         முகமண்டபம், அர்த்தமண்டபம், கருவறை ஆகிய பகுதிகளைக் கொண்டது.  இக்குடைவரையின் சிறப்பாக கருவறைகள் அமைப்பினைக் கூறலாம். முகமண்டபத்தின் தென் மற்றும் வட புறங்களில் இரண்டு கருவறைகளும், அர்த்தமண்டபத்தின் பக்கத்திற்கொன்றாக இரண்டு கருவறைகளும், அர்த்தமண்டபப் பின்சுவரில் ஐந்து கருவறைகளும் ஆக மொத்தம் ஒன்பது கருவறைகளைக் கொண்டு அமையப் பெற்றுள்ளது இதன் சிறப்பாகும். மூன்றாவது குடைவரை, முகப்பு, முகமண்டபம், அர்த்தமண்டபம், கருவறைகள் ஆகிய கூறுகளைப் பெற்றுள்ளது. மூன்று கருவறைகளும் அர்த்தமண்டபப் பின் சுவரில் அமைந்துள்ளன. ஒவ்வொரு கருவறை வாயிலிலும் பக்கத்திற்கொருவராக இரண்டு காவலர்கள் உள்ளனர்.

         இக் குடைவரையில் முதலாம் இராஜராஜரின் கல்வெட்டொன்றும், பரகேசரிவர்மரின் கல்வெட்டொன்றும் காணப்படுகிறது.  நான்காம் குடைவரை முகப்பு, முகமண்டபம், கருவறை ஆகிய அமைப்புகளை உடையது. அர்த்தமண்டபம் இன்றி முகமண்டபத்தின் பின் சுவரில் ஒரு கருவறை அமைந்துள்ளது. கருவறை, முகமண்டபச் சுவரிலிருந்து பிதுக்கமாக சற்று முன்னோக்கி இழுக்கப்பட்டுள்ளது. கருவறையின் இருபுறத்திலும் காவலர்கள் இல்லை. இந்நான்கு குடைவரைகளுள் வடக்குக் குடவரைத் தூண்களில் மட்டுமே தாமரைப் பதக்கங்கள் செதுக்கப்பட்டுள்ளன. முகமண்டபத் தென் சுவரில் மகேந்திரவர்மரின் கல்வெட்டொன்று காணப்படுகிறது. முதலாம் மகேந்திரரின் பல்வேறு கலைமுயற்சிகளில் மாமண்டூர் - நரசமங்கலம் குடைவரைகள் தனித்ததொரு சிறப்பிடத்தைப் பெற்றுத் திகழ்கின்றன.

510 : _ _ |a

மு. நளினி, டாக்டர் இரா. கலைக்கோவன், மகேந்திரர் குடைவரைகள், அலமு பதிப்பகம், சென்னை-14.

520 : _ _ |a

         மாமண்டூர்-நரசமங்கலம் குடைவரைகள் அமையப் பெற்றுள்ள இக்குன்றுத்தொடரிடையே ஓடும் ஓடையினை எல்லையாகக் கொண்டு இத்தொடர், மாமண்டூர் மற்றும் நரசமங்கலம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஓடையின் வடப்புறத்தே மாமண்டூர் வருவாய்க் கிராம எல்லையில் பெரும்பகுதி நிறைவடைந்த இரண்டு குடைவரைகளும், தென்புறத்தே நரசமங்கலம் வருவாய்க் கிராம எல்லையில் சிறியதும், பெரியதுமாக இரண்டு நிறைவடையா குடைவரைகளும் அமைந்துள்ளன. தென்வடலாக உயர்ந்து விரியும் இக்குன்றுத் தொடரின் பின்புறம் முதலாம் மகேந்திரவர்மரால் உருவாக்கப்பட்ட “சித்ரமேகத் தடாகம்” பரந்து விரிந்து காணக் கிடைக்கும். இக்குடைவரைகளை அவை அமைந்துள்ள வருவாய்க் கிராமங்களையொட்டி இரண்டு பிரிவுகளாக பிரிக்கலாம்: I. நரசமங்கல குடைவரைகள்: 1. முற்றுப் பெறாத சிறிய குடைவரை 2. முற்றுப் பெறாத பெரிய குடைவரை II. மாமண்டூர் குடைவரைகள்: 1. ருத்ர வாலீஸ்வரம் 2. வடக்கு குடைவரை.

653 : _ _ |a மாமண்டூர், குடைவரை, குடவரை, மகேந்திரர், முதலாம் மகேந்திர வர்மப் பல்லவன், பல்லவர், கோயில், காஞ்சிபுரம், தொண்டைமண்டலம், குகைக் கோயில், கிரந்தம், தமிழ்-பிராமி, கல்வெட்டு, பண்டையத் தமிழி, தூசி
700 : _ _ |a க.த.காந்திராஜன்
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
752 : _ _ |a மாமண்டூர் |c தூசி-மாமண்டூர் |d திருவண்ணாமலை |f செய்யாறு
906 : _ _ |a கி.பி.7-ஆம் நூற்றாண்டு
914 : _ _ |a 12.6434999
915 : _ _ |a 79.9331116
934 : _ _ |a உத்தரமேரூர், திருக்கழுக்குன்றம் குடைவரை, மாமல்லபுரம்
995 : _ _ |a TVA_MON_00052
barcode : TVA_MON_00052
book category : குடைவரைக் கோயில்கள்
cover :
Primary File :

TVA_MON_00052_மாமண்டூர்_குடைவரைக்-கோயில்-0001.jpg

TVA_MON_00052_மாமண்டூர்_குடைவரைக்-கோயில்-0002.jpg

TVA_MON_00052_மாமண்டூர்_குடைவரைக்-கோயில்-0003.jpg

TVA_MON_00052_மாமண்டூர்_குடைவரைக்-கோயில்-0004.jpg

TVA_MON_00052_மாமண்டூர்_குடைவரைக்-கோயில்-0005.jpg

TVA_MON_00052_மாமண்டூர்_குடைவரைக்-கோயில்-0006.jpg

TVA_MON_00052_மாமண்டூர்_குடைவரைக்-கோயில்-0007.jpg

TVA_MON_00052_மாமண்டூர்_குடைவரைக்-கோயில்-0008.jpg

TVA_MON_00052_மாமண்டூர்_குடைவரைக்-கோயில்-0009.jpg

TVA_MON_00052_மாமண்டூர்_குடைவரைக்-கோயில்-0010.jpg

TVA_MON_00052_மாமண்டூர்_குடைவரைக்-கோயில்-0011.jpg

TVA_MON_00052_மாமண்டூர்_குடைவரைக்-கோயில்-0012.jpg

TVA_MON_00052_மாமண்டூர்_குடைவரைக்-கோயில்-0013.jpg

TVA_MON_00052_மாமண்டூர்_குடைவரைக்-கோயில்-0014.jpg

TVA_MON_00052_மாமண்டூர்_குடைவரைக்-கோயில்-0015.jpg

TVA_MON_00052_மாமண்டூர்_குடைவரைக்-கோயில்-0016.jpg

TVA_MON_00052_மாமண்டூர்_குடைவரைக்-கோயில்-0017.jpg

TVA_MON_00052_மாமண்டூர்_குடைவரைக்-கோயில்-0018.jpg

TVA_MON_00052_மாமண்டூர்_குடைவரைக்-கோயில்-0019.jpg

TVA_MON_00052_மாமண்டூர்_குடைவரைக்-கோயில்-0020.jpg

TVA_MON_00052_மாமண்டூர்_குடைவரைக்-கோயில்-0021.jpg

TVA_MON_00052_மாமண்டூர்_குடைவரைக்-கோயில்-0022.jpg

TVA_MON_00052_மாமண்டூர்_குடைவரைக்-கோயில்-0023.jpg

TVA_MON_00052_மாமண்டூர்_குடைவரைக்-கோயில்-0024.jpg

TVA_MON_00052_மாமண்டூர்_குடைவரைக்-கோயில்-0025.jpg

TVA_MON_00052_மாமண்டூர்_குடைவரைக்-கோயில்-0026.jpg

TVA_MON_00052_மாமண்டூர்_குடைவரைக்-கோயில்-0027.jpg

TVA_MON_00052_மாமண்டூர்_குடைவரைக்-கோயில்-0028.jpg

TVA_MON_00052_மாமண்டூர்_குடைவரைக்-கோயில்-0029.jpg

TVA_MON_00052_மாமண்டூர்_குடைவரைக்-கோயில்-0030.jpg

TVA_MON_00052_மாமண்டூர்_குடைவரைக்-கோயில்-0031.jpg

TVA_MON_00052_மாமண்டூர்_குடைவரைக்-கோயில்-0032.jpg

TVA_MON_00052_மாமண்டூர்_குடைவரைக்-கோயில்-0033.jpg

TVA_MON_00052_மாமண்டூர்_குடைவரைக்-கோயில்-0034.jpg

TVA_MON_00052_மாமண்டூர்_குடைவரைக்-கோயில்-0035.jpg

TVA_MON_00052_மாமண்டூர்_குடைவரைக்-கோயில்-0036.jpg

TVA_MON_00052_மாமண்டூர்_குடைவரைக்-கோயில்-0038.jpg

TVA_MON_00052_மாமண்டூர்_குடைவரைக்-கோயில்-0039.jpg